எந்திரன் சாதனை - எதிரிகள் வேதனை
திருநெல்வேலி நகரில் இது வரை சினமா தோன்றிய காலத்தில் இருந்ந்து இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனைகளை சூப்பர ஸ்டார் தலைவர் செய்து வருகிறார்கள்.
- 1990 -ல் தளபதி
திருநெல்வேலி- யில் 1990 வரை எந்த திரைப்படமும் அதிகாலை 4 மணிக்கு திரையிட்டது கிடையாது. ஆனால் தளபதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. பக்கத்துக்கு வீட்டு நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க கலக்டர் தலையிட்டு முன்றாவது நாளில் இருந்து காலை 6 மணிக்கு காலை காட்சி ஆரம்பிக்க பட்டது. தொடர்ந்து பேரின்ப விலாஸ் தயீட்டரில் நூறு ௦௦ நாட்கள் ஓடியது. இந்த காலை காட்ஷி சாதனையை இன்று வரை எந்த படமும் முறியடிக்க வில்லை.
- சந்திரமுகி முதன் முதலாக திருநெல்வேலியில் இரண்டு திரையரங்குகளில் வெளியிட்டு இரண்டிலும் நூறு நாட்கள் ஓடியது. வேறு எந்த படமும் இரு திரை அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது இல்லை.
- சிவாஜி மூன்று திரை அரங்குகளில் திரையிட்டு மூன்றிலயும் நூறு நாட்கள் ஓடியது. (ராம் , பேரின்ப விலாஸ், ஸ்ரீ ரத்னா) இன்று வரை இந்த சாதனையை எந்த படமும் முறியடிக்க வில்லை முறியடிக்கவும் முடியாது. ஏனென்றால் இதுவரை எந்த படமும் மூன்று திரை அரங்குகளில் வெளி வந்தது இல்லை.
- எந்திரன் நான்கு திரை அரங்குகளில் (ராம் , பேரின்ப விலாஸ், ஸ்ரீ ரத்னா, பாம்பே) வெளியிட்டு இன்று வரை நான்கிலும் ஓடி கொண்டு உள்ளது. இந்த சாதனையையும் யாரு முறியடிக்க முடியாது. ஏனென்றால் திருநெல்வேலி மாநகரில் ஒரு திரைப்படம் இரண்டில் நூறு நாள் ஓடி , பின் மூன்று திரை அரங்கில் நூறு நாள் ஓடி பின் நான்கு திரை அரங்கில் வெளியிடுவதற்கு முன் அந்த ஹீரோவின் திரை வாழ்க்கை முடிந்து விடும் .
ஆகவே சாதனைகளின் நாயகன் நம் தலைவர்
சாதனைகள் தொடரட்டும் ...
சாமி துணை இருக்கட்டும்..
ரசிகர்களின் மனம் குளிரட்டும்
தமிழக சினிமா செழிக்கட்டும்
அன்புடன்
கூடல் இந்தியா.

மும்பை: உள்ளூரில் ஆளாளுக்கு 'எந்திரன் என்னோட கதை' என்று கிளம்ப, மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஆலிவர் ஸ்டோன், அந்தப் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்.
"இந்தப் படம் ஒரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட், மிகவும் சுவாரஸ்யமானது, அனுபவித்து மகிழ்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த, ரூ 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ள எந்திரன் திரைப்படம், அடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளது.
ஆண்டுதோறும் மும்பையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா, இந்த ஆண்டு எட்டு தினங்கள் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 250 படங்கள் திரையிடப்பட்டன.
இந்த விழாவின் இறுதிநாளில் திரையிடப்பட்ட ஒரே Mainstream Cinema ரோபோ(எந்திரன்)தான். நிறைவு நாள் நிகழ்ச்சியில் உலகின் சிறந்த படைப்பாளிகள் பலர் பங்கேற்றனர். இங்கிலாந்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல இயக்குநர்கள், நடிகர்கள் இதில் கலந்து கொண்டு ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரனின் இந்தி வடிவமான ரோபோவைப் பார்த்தனர். சப் டைட்டில்களுடன் இந்தப் படம் திரையிடப்பட்டது.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளரான ஆலிவர் ஸ்டோனும் பங்கேற்றார். சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கதத்துக்காக மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆலிவர் ஸ்டோன், ரோபோவை ரசித்துப் பார்த்தார்.
விழாவின் முடிவில் ஆலிவர் ஸ்டோனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அவர் பேசுகையில், "இந்தியப் படங்கள், அவற்றில் காண்பிக்கப்படும் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த விழாவில் நான் பார்த்த படங்களில் என்னைக் கவர்ந்தது, ரோபோ-தான். மிகவும் அருமையாக, சுவாரஸ்யமாக எடுத்திருந்தனர். முற்றிலும் புதிதாக, ஒரிஜினலாக இருந்தது. நான் மிகவும் அனுபவித்து ரசித்தேன்..", என்றார்.